இப்படி செய்தி வெளியிட்டால் 15 ஆண்டுகள் சிறை.. புதின் சிறப்பு சட்டம் !!
இப்படி செய்தி வெளியிட்டால் 15 ஆண்டுகள் சிறை.. புதின் சிறப்பு சட்டம் !!

உக்ரைன் மீதான ரஷ்ய படைகள் இன்றுடன் பத்தாவது நாளைக தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்யா மீது உக்ரைன் அடுத்தடுத்து பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறது. ரஷ்யாவின் மக்கள் உயிருக்கு குந்தகம் விளைவித்து போர்க் குற்றம் புரிந்துவருவதாக அந்நாட்டின் மீது உக்ரைன் சர்வதேச நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது. மேலும், ஊடகச் செய்திகளிலும் ரஷ்ய தாக்குதலால் பெரும் மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில் ரஷ்ய நாடாளுமன்றத்தில் நேற்று, வரைவு மசோதா ஒன்றின் மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது. போலிச் செய்திகளைப் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கைகளை எடுக்க வழிவகை செய்யும் மசோதாவை தாக்கல் செய்தது. அந்த மசோதா அடுத்தடுத்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவெற்றப்பட்டு பின்னர் அதிபர் புதினின் ஒப்புதலையும் பெற்றது.
இந்த சட்டத்தின்படி, நாளை முதல் ரஷ்ய ராணுவ நடவடிக்கை குறித்து அவதூறு செய்திகளைப் பரப்புவோர் மிகக் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றார். ரஷ்ய அரசின் ஊடகங்கள், உக்ரைன் மீதான தாக்குதலை படையெடுப்பு போர் என்றெல்லாம் குறிப்பிடாமல் சிறப்பு ராணுவ நடவடிக்கை என்றே குறிப்பிட்டு வருகின்றன. ஆனால் சர்வதே ஊடகங்கள் அனைத்தும் ரஷ்ய படையெடுப்பு என்றே குறிப்பிட்டு வருகின்றன.
இந்த புதிய சட்டத்தின்படி ரஷ்ய நடவடிக்கை குறித்து போலி செய்திகள் வெளியிட்டால் 3 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, கடுமையான அபராதங்களை சந்திக்கக் கூடும். இந்தச் சட்டத்தின் நோக்கம் ரஷ்ய வீரர்களை, ரஷ்ய ராணுவ அதிகாரிகளைப் பாதுகாப்பது. உண்மையைப் பாதுகாப்பது என்று ரஷ்ய நாடாளுமன்றம் தெரிவித்துள்ளது.
newstm.in