சசிகலா பற்றிய கேள்வி… தெறித்து ஓடிய ஓபிஎஸ்!!
சசிகலா பற்றிய கேள்வி… தெறித்து ஓடிய ஓபிஎஸ்!!

சசிகலாவை அதிமுகவில் இணைப்பது குறித்த கேள்விக்கு 'அய்யோ சாமி வேண்டாம்' என ஒபிஎஸ் பதிலளித்துள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமி, சி.வி.சண்முகம், ஜெயக்குமார் உள்ளிட்டோர் சசிகலா அதிமுகவில் இணைவதையும் வரவேற்பதையும் விரும்பவில்லை. ஆனால் பெரும்பாலான தொண்டர்களின் எண்ணம் சசிகலாவின் கீழ் அதிமுக வர வேண்டும் என்பதாகவே உள்ளது.
தேனி மாவட்ட அதிமுகவினர் தீர்மானம் நிறைவேற்றியது போல ஒவ்வொரு மாவட்டத்திலும் சசிகலாவுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றக் கூடும். சசிகலாவை ஓபிஎஸ் நேரில் சந்தித்து பேசியதாகவும் தகவல் வெளி வருகின்றன.

அப்படியிருக்கும் போது இதற்கு நேர் எதிராக எடப்பாடி பழனிச்சாமி, எஸ். பி வேலுமணி, சி.வி சண்முகம் உள்ளிட்டோர் என்ன செய்வார்கள்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. சசிகலா வருகையை ஏற்றாலும், தினகரனை ஏற்க மாட்டார்கள்.
இந்நிலையில், மதுரை விமான நிலையத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது, சசிகலாவை அதிமுகவில் இணைப்பது குறித்த கேள்விக்கு அய்யோ சாமி வேண்டாம் என பதிலளித்துள்ளார்.
ஓபிஎஸ்-இன் சகோதரர் ஓ.ராஜா சசிகலாவை நேரில் சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது. அதனால் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
newstm.in

