Theme Check

ஆர்எஸ்எஸ் காரர்கள் இளையராஜாவை சுற்றிவளைத்திருப்பார்கள்- திருமாவளவன் !!

ஆர்எஸ்எஸ் காரர்கள் இளையராஜாவை சுற்றிவளைத்திருப்பார்கள்- திருமாவளவன் !!

ஆர்எஸ்எஸ் காரர்கள் இளையராஜாவை சுற்றிவளைத்திருப்பார்கள்- திருமாவளவன் !!
X

ஆர்எஸ்எஸ் காரர்கள் இளையராஜாவை சுற்றிவளைத்து இருக்கக்கூடும் என நினைக்கிறேன் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், சென்னை எழும்பூரில் நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, அரசியல் ஆதாயங்களுக்காக இதுவரை எந்த முடிவையும் எடுத்ததில்லை. விளிம்பு நிலை மக்களுக்கு பாடுபட வேண்டும் என்ற பொறுப்பு உணர்வுடன் மட்டுமே முடிவுகளை எடுத்து வருகிறேன். இதை தொடர வேண்டிய வரலாற்று கட்டாயம் இருக்கிறது.

கர்நாடகாவில் ஹிஜாப்க்கு எதிராக சங் பரிவார் கும்பல் தூண்டிவிட்டு மாணவ சமூகத்தை பிளவு படுத்தும் செயலில் ஈடுபடுகிறது. இஸ்லாமியர்கள் அமைதி காக்க வேண்டும். எதிர்வினை என்ற பெயரில் அவர்கள் விரும்பும் இருதுருவ அணி புரட்சிக்கு வழி வகுக்கக் கூடாது. இஸ்லாமியர் அல்லாத சில ஜனநாயக சக்திகள் இதை முறியடிக்க வேண்டிய பொறுப்பு இருக்கிறது என்றார்.

ilayaraja

அம்பேத்கர் சிலைக்கு மாலை போடும் போதாவது, அவர்களுக்கு ஞானம் கிடைக்கிறதா என பார்க்கலாம் என நினைத்தேன். பாஜக, ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் அம்பேத்கர் சிலையை திறந்து மாலை போடுங்கள். வேண்டுமென்றே வீம்புக்கு வம்பு இழுக்கிறார்கள். கவனம் தன் பக்கம் திரும்பவேண்டும் என வன்முறைகளை திட்டமிட்டு தூண்டக்கூடிய சக்திகள்தான் பாஜக என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், ஆர்எஸ்எஸ் காரர்கள் அப்படி இளையராஜாவை சுற்றிவளைத்து இருக்கக்கூடும் என நினைக்கிறேன். அம்பேத்கர் மோடி சிந்தனையாளர்கள் செயல்பாட்டாளர்களும் என்ற புத்தகத்தை கொடுத்து அணிந்துரை கேட்டிருக்கிறார்கள். அவரும் இரண்டு பக்கம் எழுதிக் கொடுத்திருக்கிறார். அம்பேத்கர் இருந்திருந்தால் மோடியை பாராட்டி இருப்பார் என இசைஞானி சொல்லியிருக்கிறார்.

ilayaraja

மோடியை எப்படி அவர் விமர்சித்து இருப்பார் என சொல்ல முடியாது. அம்பேத்கரால் மோடியை சகித்திருக்க முடியாது. அவர் இருந்திருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்திருக்க முடியாது. அம்பேத்கர் இன்னும் 5 ஆண்டுகள் உயிரோடு இருந்திருந்தால், இந்தியாவின் தலையெழுத்தே மாறியிருக்கும்; திசை வழியே மாறியிருக்கும். அவர் மறைந்த பிறகு இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார். சனாதன கும்பலின் முதல் எதிரி அம்பேத்கர். ஆர்.எஸ்.எஸ் யின் அரசியலை இறுதி மூச்சுவரை மூர்க்கமாக எதிர்த்தார் அம்பேத்கர்.

ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் திருமணம் செய்து கொள்ளாமல் 13 ஆயிரம் பேர் இருக்கிறார்கள். இசைஞானி இளையராஜா போன்றவர்களை குறி வைப்பதே அவர்களின் முக்கிய நோக்கம். இளையராஜா பாவம் என்று இரக்கம் காட்ட விரும்புகிறேன். தமிழ்நாட்டை குறிவைத்து விட்டார்கள். இஸ்லாமிய வெறுப்பை தீவிரப்படுத்துகிறார்கள். கிருத்துவ எதிர்ப்பையும் கையில் எடுக்கிறார்கள்.

விடுதலை சிறுத்தைகளை சீண்டினால் கவனம் கிடைக்கும் என நினைக்கிறார்கள். பாஜகவா? விடுதலை சிறுத்தைகளா? என்ற அரசியலை எடுக்க எந்த தயக்கமும் எங்களுக்கு இல்லை. இது சமூக நீதி மண், இங்கு காலூன்ற அனுமதிக்கக் கூடாது என்ற கவலை தான் இருக்கிறது எனவும் திருமாவளவன் பேசினார்.

newstm.in

Next Story
Share it