இஸ்லாமியர்களின் போராட்டத்தில் வன்முறையை தூண்டிய ஆர்.எஸ்.எஸ் கும்பல்!!
இஸ்லாமியர்களின் போராட்டத்தில் வன்முறையை தூண்டிய ஆர்.எஸ்.எஸ் கும்பல்!!

பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் இஸ்லாமிய மதத்தை பற்றியும், முகமது நபியை பற்றியும் எதிராக கருத்து தெரிவித்திருந்தார். அவரது கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்புகள் புகாரளித்தன. இதையடுத்து மத உணர்வுகளை புண்படுத்தியதாக நுபுர் சர்மாவிற்கு எதிராக மகாராஷ்டிராவில் இரண்டு வழக்குகள் தொடரப்பட்டது.
இந்த நிலையில், அவரது கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் முக்கியமான 'பராதே மார்க்கெட்டில் கடைகளை மூடும்படி சிறுபான்மை சமுதாயத்தினர் கேட்டுக்கொண்டனர்.

ஆனால் அதற்கு மற்றொரு தரப்பினர் கடையை மூடக்கூடாது என வியாபாரிகளை எச்சரித்தனர். இதனால் பராதே மார்க்கெட்டில் இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் ஒருகட்டத்தில் மோதலாக மாறியது.
இதில் இந்துத்வா கும்பலைச் சேர்ந்த ஒரு தரப்பினர், மற்றொரு தரப்பினர் மீது கல்வீச்சித் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலின் போது, பெட்ரோல் வெடிகுண்டுகளும் வீசப்பட்டதால் போராட்ட களம், வன்முறை காடாக காட்சியளித்தது.

பின்னர் தகவலறிந்து வந்த காவல்துறையினர், கூட்டத்தை கலைக்க தடியடி நடத்தியதோடு, கண்ணீர் புகைக்குண்டுகளையும் வீசி கூட்டத்தைக் கலைத்தனர். அங்கு ஆயுதம் தாங்கிய 12 கம்பெனி சிறப்பு காவல் படையை அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
newstm.in

