Theme Check

அனுமதி பெறாத ராகுல் காந்தி.. விளக்கம் கேட்கிறது மத்திய அரசு..!

அனுமதி பெறாத ராகுல் காந்தி.. விளக்கம் கேட்கிறது மத்திய அரசு..!

அனுமதி பெறாத ராகுல் காந்தி.. விளக்கம் கேட்கிறது மத்திய அரசு..!
X

வெளிநாடு பயணிக்கும் எம்பி-க்கள் வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் எழுத்துப்பூர்வமான அனுமதி பெறவேண்டும் என்பது நெறிமுறை. இந்த அனுமதி, பயணத்திற்கு மூன்று வாரங்களுக்கு முன்னதாக பெறப்பட வேண்டும்.

பல்வேறு நாடுகளின் அரசுகள் மற்றும் அமைப்புகள் நடத்தும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் இந்திய எம்பி-க்களுக்கான அழைப்பு வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலமாகவே அனுப்பப்படும்.

அப்படி இல்லாமல், எம்பி-க்கள் நேரடியாக அழைக்கப்படும் போது, மத்திய அரசிடம் இருந்து அரசியல் ரீதியான அனுமதி பெறுவது கட்டாயம்.

இந்நிலையில், காங்கிரஸ் எம்பி ராகுல் ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு சமீபத்தில் சென்றார். அங்கு, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் நடத்திய கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்றார்.

இந்தப் பயணத்திற்கு, வெளியுறவுத்துறையின் அனுமதியை ராகுல் பெறவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப மத்திய அரசு தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Next Story
Share it