விவோ நிறுவனத்திற்கு சொந்தமான 44 இடங்களில் ரெய்டு!!
விவோ நிறுவனத்திற்கு சொந்தமான 44 இடங்களில் ரெய்டு!!

சீன மொபைல் தயாரிப்பு நிறுவனமான விவோ மற்றும் அந்நிறுவனம் தொடர்பான பிற நிறுவனங்களில் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் ஒரே நேரத்தில் 44 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாகவும் இந்த சோதனையில் சிக்கிய ஆவணங்கள் என்னென்ன குறித்த தகவல் இன்னும் வெளிவரவில்லை என்றும் கூறப்படுகிறது.
மேலாண்மை சட்டம் மற்றும் அரசின் விதிமுறைகளை மீறியதால் இந்தியா முழுவதும் 44 இடங்களில் இந்த சோதனை நடந்து வருவதாகவும் குறிப்பாக பீகார், ஜார்கண்ட், உத்திரப்பிரதேசம், இமாச்சல பிரதேசம், பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களில் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
சீனாவை சேர்ந்த மொபைல் நிறுவனங்களான விவோ, ஷியோமி, ஓப்போ உள்ளிட்ட நிறுவனங்களுடன் தொடர்புடைய 20 இடங்களில் கடந்த டிசம்பர் மாதம் வருமான வரித் துறை ரெய்டு நடத்தியது குறிப்பிடத்தக்கது.
அப்போது வரி ஏய்ப்பு தொடர்பாக சோதனை நடத்தப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம், ஷியோமி நிறுவனத்திடம் சட்டவிரோத பரிவர்த்தனைகள் தொடர்பாக 5,551.27 கோடி ரூபாயை அமலாக்கத்துறை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.