பற்றி எரியும் ராஜபக்ஷே வீடு...!! பகீர் வீடியோ
பற்றி எரியும் ராஜபக்ஷே வீடு...!! பகீர் வீடியோ

ராஜபக்சே குடும்பத்தினர் தவறான முடிவுகளே இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என கூறி எதிர்க்கட்சியினரும், பொதுமக்களும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இலங்கையின் குர்ணாகல் பகுதியில் உள்ள மகிந்த ராஜபக்ஷவின் வீட்டுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்துள்ளனர். இதேபோல் மெதமுலன பகுதியில் இருக்கும் ராஜபக்சேவின் பூர்வீக வீட்டுக்கும் போராட்டக்காரர்கள் தீவைத்தனர். மேலும் ராஜபக்ஷே இருக்குமிடத்தை போராட்டக்காரர்கள் தேடி அலைந்து வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஆளுங்கட்சியை சேர்ந்த எம்பி மற்றும் ராஜபக்சே ஆதரவாளர்கள் வீடுகள், ஆளும் கட்சி அலுவலகத்திற்கு போராட்டக்காரர்கள் தொடர்ந்து தீ வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
" style="border: 0px; overflow: hidden"" title="YouTube video player" width="560">
Tags:
Next Story

