பெரும் சோகத்தில் ராஜேந்திர பாலாஜி.. இப்படி நடக்கும் என எதிர்பார்க்கவே இல்லை !!
பெரும் சோகத்தில் ராஜேந்திர பாலாஜி.. இப்படி நடக்கும் என எதிர்பார்க்கவே இல்லை !!

கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழக பால்வளத் துறை அமைச்சராக பதவி வகித்த ராஜேந்திர பாலாஜி. இவர் ஆவின் நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.3 கோடி முறைகேடு செய்ததாக அளிக்கப்பட்ட புகாரில் கைது செய்யப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், விசாரணை நடைபெறும் காவல் எல்லைக்கு வெளியே செல்லக்கூடாது, தனது பாஸ்போர்ட்டை சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் பல்வேறு நிபந்தனைகளுடன் ராஜேந்திர பாலாஜிக்கு கடந்த ஜனவரி 12ஆம் தேதி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

அப்போது முதல் தற்போது வரை வீட்டிலேயே அவர் இருந்து வருகிறார். இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி தற்போது மனு ஒன்று தாக்கல் செய்துள்ளார். அதில், வரும் ஜூன் 22ஆம் தேதிமுதல் ஜூன் 25ஆம் தேதிவரை சென்னையில் நடைபெறவுள்ள அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டங்களில் பங்கேற்க எனக்கு அனுமதியளிக்க வேண்டும்.
விருதுநகர் மாவட்டச் செயலாளர் என்ற முறையில் அந்தக் கூட்டங்களில் பங்கேற்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அப்படியே மருத்துவ பரிசோதனையையும் மேற்கொள்வேன் எனவே, எனது ஜாமீன் நிபந்தனைகளை 5 நாட்களுக்கு தளர்த்த வேண்டும், என்று கோரியிருந்தார். இந்த வழக்கு நேற்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, ஹீமா கோலி ஆகியோர் அடங்கிய விடுமுறைக் கால சிறப்பு அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், கட்சியின் பொதுக்குழுவில் கலந்துகொள்ளவில்லை என்றால் ஒன்றும் ஆகிவிடாது. மேலும், இதுதொடர்பான மனுவை அவசர வழக்காக பட்டியலிட்டும் இந்த அமர்வில் அவசர வழக்காககருதி விசாரிக்க முடியாது எனக்கூறி ராஜேந்திர பாலாஜியின் மனுவை நிராகரித்து உத்தரவிட்டுள்ளனர். இதனால் அவர்அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
newstm.in

