Theme Check

மீண்டும் இணையும் ரஜினி, இளையராஜா!

மீண்டும் இணையும் ரஜினி, இளையராஜா!

மீண்டும் இணையும் ரஜினி, இளையராஜா!
X

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இசைஞானி இளையராஜா மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரை நூற்றாண்டு காலம் தனது இசையால் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை கட்டிப்போட்டிருப்பவர் இசைஞானி இளையராஜா. இன்றும் அவரது இசைக்கு மவுசு குறையவில்லை. அவருடன் சமகாலத்தில் நடிகராக இருந்து இன்று புகழின் உச்சியில் இருப்பவர் ரஜினிகாந்த்.

தற்போதும் ரஜினிகாந்த் இளம் இயக்குநர்களுக்கு வாய்ப்பு அளித்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவரது அடுத்த படமான தலைவர் 169 படத்தை நெல்சன் இயக்குகிறார். அனிருத் இசை அமைக்கிறார்.

rajini1

இந்நிலையில் ரஜினியின் 170ஆவது படத்தை இளையராஜா தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலிவுட் இயக்குநர் பால்கி படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. பால்கியின் ஹிந்தி படங்களுக்கு இளையராஜா இசை அமைத்துள்ளார்.

rajinikanth-ilayaraja1

அதனால் ரஜினி 170 படத்திற்கு இளையராஜா இசை அமைப்பார் என்று கூறப்படுகிறது. 16 வயதினிலே தொடங்கி ரஜினி நடித்த பல்வேறு படங்களுக்கு இசையமைத்துள்ள இளையராஜா மலரும் நினைவுகள் என்பதை சுட்டிக்காட்டும் விதமாக தான் ரஜினியுடன் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார்.


இந்நிலையில் இந்த தகவலால் ரஜினி மற்றும் இளையராஜா ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

newstm.in

Next Story
Share it