Theme Check

ரஜினிகாந்தின் 169-வது படம்.. தலைப்பு என்ன தெரியுமா..?

ரஜினிகாந்தின் 169-வது படம்.. தலைப்பு என்ன தெரியுமா..?

ரஜினிகாந்தின் 169-வது படம்.. தலைப்பு என்ன தெரியுமா..?
X

ரஜினிகாந்த் நடித்த ‘அண்ணாத்த’ திரைப்படம் கடந்த தீபாவளி பண்டிகையின்போது வெளியானது. அடுத்ததாக ரஜினி, நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இது, ரஜினிக்கு 169-வது படம்.

இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்க ஐஸ்வர்யா ராயிடமும், நகைச்சுவை வேடத்துக்கு வடிவேலுவிடமும் பேசி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே, ரஜினியுடன் ‘எந்திரன்’ படத்தில் ஐஸ்வர்யா ராயும், ‘சந்திரமுகி’ படத்தில் வடிவேலுவும் நடித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினியின் 169-வது படத்தை அனைத்து மொழிகளிலும் வெளியிட திட்டமிட்டு இருப்பதாகவும், எனவே எல்லா மொழிக்கும் பொருந்தும் வகையில் ஆங்கிலத்தில் பெயர் வைக்க முடிவு செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தற்போது 5 பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாகவும், இந்த பட்டியலில் ‘பாஸ்’ என்ற பெயரும் இருக்கிறது என்றும் இணைய தளங்களில் தகவல் பரவி வருகிறது.

ஆனால், படக்குழுவினர் இதை உறுதிப்படுத்தவில்லை. படப்பிடிப்பை ஆகஸ்ட் மாதம் தொடங்கி, பொங்கல் பண்டிகையில் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர்.

Next Story
Share it