Theme Check

ராஜீவ் கொலை வழக்கு.. மீதமுள்ள 6 பேர் விடுதலை குறித்து முதல்வர் ஆலோசனை..!

ராஜீவ் கொலை வழக்கு.. மீதமுள்ள 6 பேர் விடுதலை குறித்து முதல்வர் ஆலோசனை..!

ராஜீவ் கொலை வழக்கு.. மீதமுள்ள 6 பேர் விடுதலை குறித்து முதல்வர் ஆலோசனை..!
X

பேரறிவாளன் விடுதலையை தொடர்ந்து மற்ற 6 பேர் விடுதலை தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 31 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த பேரறிவாளன் தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை சுமார் 6 ஆண்டுகள் நடைபெற்ற நிலையில், பேரறிவாளனை சிறையில் இருந்து விடுதலை செய்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்நிலையில், பேரறிவாளன் விடுதலையை தொடர்ந்து மற்ற 6 பேர் விடுதலை தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமைச் செயலர் இறையன்பு, அரசு தலைமை வழக்கறிஞர்கள், மூத்த வழக்கறிஞர்கள், அமைச்சர் துரைமுருகன், ரகுபதி மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story
Share it