Theme Check

பாலியல் பலாத்காரம்.. படம் எடுத்து மிரட்டல்.. தொழில் அதிபர் மீது பெண் புகார்..!

பாலியல் பலாத்காரம்.. படம் எடுத்து மிரட்டல்.. தொழில் அதிபர் மீது பெண் புகார்..!

பாலியல் பலாத்காரம்.. படம் எடுத்து மிரட்டல்.. தொழில் அதிபர் மீது பெண் புகார்..!
X

கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டம் கல்கட்டகி தாலுகா தேவிகொப்பா கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

அதே பகுதியைச் சேர்ந்த மவுலா சாபா என்ற தொழில் அதிபரிடம் அந்தப் பெண்ணின் கணவர் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், அந்தப் பெண்ணின் கணவரை அடிக்கடி வேலை விஷயமாக வெளியூருக்கு அனுப்பியுள்ளார்.

அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மவுலா சாபா, அந்தப் பெண்ணின் வீட்டிற்கு சென்று அவரை மிரட்டி கற்பழித்துள்ளார். மேலும், அந்தப் பெண்ணை ஆபாசமாக படம் மற்றும் வீடியோ எடுத்துள்ளார். இதுகுறித்து வெளியே யாரிடமும் கூறினால் ஆபாச படங்களை வெளியிடுவதாக மிரட்டியுள்ளார்.

இந்நிலையில் அந்த பெண், கல்கட்டகி மகளிர் போலீசில் தொழில் அதிபர் மீது புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், தொழில் அதிபரை கைது செய்ய போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மனமுடைந்த அந்தப் பெண், போராட்டம் நடத்தப் போவதாக தெரிவித்துள்ளார்.

Next Story
Share it