Theme Check

ரியல் எஸ்டேட் காரரின் மனைவிகள் கலாட்டா... அரிவாள் வெட்டு.. வீடியோவால் பரபரப்பு

ரியல் எஸ்டேட் காரரின் மனைவிகள் கலாட்டா... அரிவாள் வெட்டு.. வீடியோவால் பரபரப்பு

ரியல் எஸ்டேட் காரரின் மனைவிகள் கலாட்டா... அரிவாள் வெட்டு.. வீடியோவால் பரபரப்பு
X

காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அருகேயுள்ள சின்னாலம்பாடி பகுதியில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் முதல் மனைவியை பிரிந்து, இரண்டாவதாக அருணா என்பவரை திருமணம் செய்துள்ளார். ரவி- அருணா தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக இருவருக்கும் குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் அருணா தனது இரு பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு தாயார் வீட்டிற்கு சென்றுவிட்டார். சிறிது காலம் அங்கிருந்த பின்னர் தன் பிள்ளைகளின் கல்வி மற்றும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நேற்று மீண்டும் சின்னாலம்பாடி கிராமத்தில் உள்ள தன் கணவர் ரவி வீட்டிற்கு செல்ல திட்டமிட்டார்.

எனினும், சாலவாக்கம் காவல்நிலையத்தில் தனக்கும் தன் பிள்ளைகளுக்கும் ஏதேனும் அசம்பாவிதம் நடைபெற்றால் தனது கணவர் ரவியும் அவருடைய முதல் மனைவியும் தான் காரணம் என எழுத்துப்பூர்வமாக கடிதம் அளித்துவிட்டு தன் உறவினர்கள் மற்றும் பிள்ளைகளுடன் கணவர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

wife attack

காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்த தகவல் ரவிக்கு தெரியவந்தது. இதனால்ல ஆத்திரமடைந்த ரவி வீட்டிற்கு வந்த இரண்டாவது மனைவி அருணாவிடம் தகராறில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் வீட்டில் இருந்த அரிவாளுடன் தன் பிள்ளைகளின் எதிரே தனது மனைவி அருணாவை வெட்ட முயற்சித்திருக்கிறார்.

இதில் அருணாவிற்கும் அவரது சகோதரருக்கும் வெட்டுக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. இது தொடர்பான வீடியோ நேற்று சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், ரவி தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் உதவியாளர் எனக் கூறி பல இடங்களில் தொடர்ச்சியாக மோசடி செய்து வருவதாகவும் அருணா காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். மேலும், தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமென சம்பந்தப்பட்ட காவல் துறையில் புகார் அளித்தும் காவலர்கள் எந்த ஒரு பாதுகாப்பும் அளிக்கவில்லை என வருத்தம் தெரிவித்தார்.

தற்போது அரிவாளால் வெட்ட முயன்ற வீடியோ வெளியான நிலையில், புகாரின்பேரில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுதாகர் உடனடியாக இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறுதி அளித்துள்ளார்.


newstm.in

Next Story
Share it