Theme Check

மகளை மீட்டுக்கொடுங்க.. நடிகர் தாடி பாலாஜி பரபரப்பு புகார்

மகளை மீட்டுக்கொடுங்க.. நடிகர் தாடி பாலாஜி பரபரப்பு புகார்

மகளை மீட்டுக்கொடுங்க.. நடிகர் தாடி பாலாஜி பரபரப்பு புகார்
X

தனது மகளை, தன் மனைவியிடம் இருந்து மீட்டுத் தருமாறு தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் நடிகர் தாடி பாலாஜி கோரிக்கை மனு அளித்துள்ளார்.

நடிகர் தாடி பாலாஜியும் அவரது மனைவி நித்யாவும், கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017ஆம் ஆண்டு முதல் பிரிந்து தனியாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களது 12 வயது மகள், தாடி பாலாஜி மனைவியிடம் இருந்து வளர்ந்து வருகிறார். பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வரும் அந்தக் குழந்தை, மனைவி நித்யாவின் தவறான வழிகாட்டுதலால் சமூக வலைதளத்தில் காணொலி பதிவிடுவதாகவும், இதனால் அவரது படிப்பு பாதிக்கப்படுவதாகவும் புகார் கூறியுள்ளார் தாடி பாலாஜி.

thadi balaji

இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், நித்யாவை பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை. அவர் வாழ்க்கையை எப்படி வேண்டுமானாலும் வாழட்டும். அதில் நான் தலையிட மாட்டேன். ஆனால் என் மகளின் வாழ்க்கை வீணாவதை என்னால் பார்த்து கொண்டிருக்க முடியாது, எனக் கூறுகின்றார்.

இதைக் குறிப்பிட்டு தனது மகளை, மனைவி நித்யாவிடமிருந்து மீட்டுத் தருமாறு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் அவர் மனு அளித்துள்ளார். தன் மகளை மிரட்டி தன்னிடம் பணம் பறிக்கும் முயற்சியில் மனைவி நித்யா ஈடுபட்டு வருவதாகவும் குற்றம்சாட்டினார்.

thadi balaji

மேலும் மகளின் எதிர்காலத்தை கெடுக்கும் வகையில் சமூக வலைதளங்களில் என்னை பற்றி தவறாக பேச வைப்பதாகவும் தெரிவித்தார். எனவே இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாடி பாலாஜி தெரிவித்துள்ளார். அவரின் இந்த குற்றச்சாட்டு தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in


Next Story
Share it