பி.எஃப் மீதான வட்டி குறைப்பு.. அதிர்ச்சியில் தொழிலாளர்கள் !
பி.எஃப் மீதான வட்டி குறைப்பு.. அதிர்ச்சியில் தொழிலாளர்கள் !

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியான பி.எஃப் மீதான வட்டி 8.50 சதவிகிதத்தில் இருந்து 8.10 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஏற்கெனவே பணவீக்கம் அதிகரித்துக்கொண்டிருப்பதால் வட்டி விகிதங்களை குறைக்கவேண்டும் என பல்வேறு தரப்பிபல் இருந்து கோரிக்கை வலுத்துவருகிறது. அதேநேரத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக பொருளாதார வளர்ச்சி என்பதும் மந்தமாகவே இருந்து வருவதால் தற்போது வட்டி விகிதங்களை அதிகரிக்க வேண்டாம் என ரிசர்வ் வங்கி தனது கருத்தை தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், 2021- 22க்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி 8.50% இல் இருந்து 8.10%ஆக குறைக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பின் நிர்வாகக் குழு கூட்டத்தில் வட்டியை குறைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டபோதிலும் கடந்த சில ஆண்டுகளாக பி.எஃப் மீதான வட்டி குறைக்கப்படவில்லை. இந்நிலையில் 2 ஆண்டுகளாக பி.எஃப் வட்டி விகிதம் 8.50% ஆக நீடித்த நிலையில் தற்போது குறைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பிற வட்டிவிகிதங்களைவிட இது சற்று அதிகமாகவே இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
newstm.in

