Theme Check

ஹிஜாபை அகற்ற மறுப்பு.. தேர்வு எழுதாமல் திரும்பிச்சென்ற மாணவி !!

ஹிஜாபை அகற்ற மறுப்பு.. தேர்வு எழுதாமல் திரும்பிச்சென்ற மாணவி !!

ஹிஜாபை அகற்ற மறுப்பு.. தேர்வு எழுதாமல் திரும்பிச்சென்ற மாணவி !!
X

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா அரசு பி.யூ.கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்புக்கு வந்தனர். அக்கல்லூரி முதல்வர், ஹிஜாப் அணிய தடை விதித்து உத்தரவிட்டார். எனினும் மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வந்ததால், அவர்கள் கல்லூரி வளாகத்தின் வெளியே தடுத்து நிறுத்தப்பட்டனர்.

பின்னர் இஸ்லாமிய மாணவிகள் போராட்டம் நடத்தினர். இதனிடையே, மற்றொரு தரப்பு மாணவ- மாணவிகள் காவி துண்டு போட்டு வகுப்புக்கு வந்தனர். இந்த விவகாரத்தில் கடந்த 8ஆம் தேதி மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. தேசியக்கொடி கம்பத்தில் காவி துண்டு அணிவித்த மாணவர்கள் காவிக்கொடியை ஏற்றினர்.

karnataka-student

இதையடுத்து கர்நாடகத்தில் பள்ளி. கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. 3 நாட்கள் விடுமுறைக்கு பின்பு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

அம்மாநிலத்தின் பல பள்ளிகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை பள்ளி நிர்வாகம் அனுமதிக்கவில்லை. ஹிஜாப்பை நீக்கிய பிறகே மாணவிகள் பள்ளியில் அனுமதிக்கப்பட்டனர். மாண்டியாவில் ரோட்ரி சோசைட்டி பள்ளியில் புர்கா அணிந்து வந்த ஆசிரியர்களும், புர்காவை நீக்கிய பிறகே பள்ளியில் அனுமதிக்கப்பட்டனர்.

karnataka-student

ஷிவ்மோகாவில் உள்ள ஒரு பள்ளியில் இன்று தேர்வு நடைபெற்றது. இப்பள்ளிக்கு ஹிஜாப் அணிந்து வந்த மாணவிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஹிஜாப்பை அகற்றினால் மட்டுமே அனுமதி அளிக்கப்படும் எனக் கூறியதால், தேர்வு எழுதாமல் வீட்டிற்கே திரும்பிச்சென்றார் அந்த மாணவி. இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

newstm.in

Tags:
Next Story
Share it