முடங்கியது ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க்!!
முடங்கியது ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க்!!

இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோவில் அழைப்புகள் மற்றும் இணைய சேவையை பயன்படுத்துவதில் சிரமம் எதிர்கொண்டதாக பலரும் தெரிவித்துள்ளனர்.
மும்பை டெலிகாம் வட்டாரத்தில் திடீரென முடங்கியதால், வாடிக்கையாளர்கள் பலர் அவதி அடைந்துள்ளனர். ஜியோ நெட்வொர்க்கில் இருந்து புதிய அழைப்புகளை மேற்கொள்ள முடியவில்லை என ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.
பிற எண்களில் இருந்தும் ஜியோவுக்கு அழைக்க முடியவில்லை எனவும் கூறியுள்ளனர். ஜியோ டூ ஜியோவுக்கு கூட அழைப்புகள் செல்லவில்லை எனத் தெரிவித்துள்ளனர். இந்தப் பிரச்னை மும்பையின் அனைத்து புறநகர் பகுதிகளிலும் இருப்பதாக கூறப்படுகிறது.

கல்யாண், டோம்பிவிலி மற்றும் தானே பகுதிகளில் இருக்கும் ஜியோ வாடிக்கையாளர்கள் நெட்வொர்க் முடக்கத்தை எதிர் கொண்டுள்ளனர். ‘Not Registered on Network’ என தங்களது மொபைல் போனில் வருவதாக பயனர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சிக்னல் பிரச்சனை குறித்து ஜியோ இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. மும்பையில் மட்டும் இந்தப் பிரச்னை இருக்கிறதா அல்லது வேறு இடங்களிலும் உள்ளதா என்பது இனிமேல் தான் தெரியவரும்.
newstm.in

