சீலை அகற்றுங்கள்.. ஈபிஎஸை தொடர்ந்து ஓபிஎஸ் நீதிமன்றத்தில் முறையீடு
சீலை அகற்றுங்கள்.. ஈபிஎஸை தொடர்ந்து ஓபிஎஸ் நீதிமன்றத்தில் முறையீடு

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் மோதிக்கொண்டனர். அச்சாலையில் நின்றிருந்த தனியார் பேருந்து, கார்கள் அடித்து நொருக்கப்பட்டன. கல்வீசியும் கட்டையால் தாக்கியும் கொண்டனர். இதனால் அதிமுக அலுவலகம் உள்ள சாலை போர்க்களம் போன்று மாறியது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து ஏற்பட்ட சட்டம் ஒழுங்கு பிரச்சனை காரணமாக அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். அதன்பின்னர் அங்கு நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதனிடையே, அதிமுக அலுவலகத்திற்கு யாருக்கு உரிமை உள்ளது என்பது குறித்து ஜூலை 25 ஆம் தேதி ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி இரு தரப்பினருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அலுவலகத்திற்கு வைக்கப்பட்டுள்ள சீலை அகற்றவேண்டும் என்ற கோரிக்கையுடன் மனுதாக்கல் செய்திருப்பதாகவும். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. இந்த முறையீட்டை ஏற்றுக்கொண்டு வழக்கை விசாரணைக்கு நாளை ஏற்றுக்கொள்வதாக நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இதனை தொடர்ந்து இதே விவகாரத்தில் ஓபிஎஸ் தரப்பிலும் அவசர வழக்காக விசாரிக்கவேண்டும் என்று முறையீடு செய்யப்பட்டது. அதில், வருவாய் கோட்டாட்சியரின் உத்தரவை ரத்துசெய்து சீலை அகற்ற உத்தரவிடக்கோரி தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை கேட்டுக்கொண்ட நீதிபதி, இதுதொடர்பான மனுதாக்கல் நடைமுறைகள் முடிந்தால், வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்தார். இந்த வழக்கின் நடைமுறைகள் முடிந்தால், நாளை இரு தரப்பினரின் வழக்குகளும் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
newstm.in

