குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் அறிவிப்பு!!

குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் அறிவிப்பு!!

குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் அறிவிப்பு!!
X

இந்தியாவின் குடியரசுத் துணைத் தலைவராக உள்ள பாஜக மூத்த தலைவர் வெங்கய்யா நாயுடுவின் பதவிக்காலம் வரும் ஆகஸ்டு 10-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து, இந்திய தலைமை தேர்தல் ஆணையம் குடியரசுத் துணைத் தலைவருக்கான தேர்தல் தேதியை வெளியிட்டுள்ளது.

அதன்படி ஆகஸ்ட் 6-ம் தேதி குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 5-ம் தேதி மனுத்தாக்கல் தொடங்கும் எனவும் வேட்பாளர்கள் வேட்புமனுவைத் தாக்கல் செய்ய ஜூலை 19-ம் தேதி கடைசி நாள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜூலை 20-ம் தேதி வேட்புமனு மீது பரிசீலனை நடைபெறும் எனவும் வேட்புமனுக்களைத் திரும்பப் பெற ஜூலை 22 கடைசி தினம் எனவும் இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

EC

ஆகஸ்ட் 6-ம் தேதி வாக்குப்பதிவு முடிந்த உடன் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசு துணைத்தலைவர் வேட்பாளரை பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா அறிவித்துள்ளார். மேற்கு வங்க ஆளுநராக உள்ள ஜெகதீப் தங்கரை குடியரசு துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Jagadeep thangar

ஜெகதீப் தங்கர் 1951-ம் ஆண்டு மே மாதம் 18-ம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு சிறிய கிராமமான கிதானாவில் பிறந்தார். அவர் தனது பள்ளிக் கல்வியை சித்தோர்கரில் உள்ள சைனிக் பள்ளியில் முடித்தார். பின்னர் ஜெய்ப்பூர் ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்.

இவர் ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுஹுனு தொகுதியிலிருத்து 1989-ம் ஆண்டு எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ராஜஸ்தான் மாநிலம் கிஷன்கர்ஹ் தொகுதியில் இரு முறை எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார். முன்னதாக ராஜஸ்தான் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவராக இருந்துள்ளார். இவர் கடந்த 2019 ஜூலை 30-ம் தேதி மேற்கு வங்க ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார்.

Tags:
Next Story
Share it