நெகிழ்ச்சி! இந்து மத ஊழியருக்கு இறுதிச் சடங்கு செய்த இஸ்லாமிய குடும்பம்!!
நெகிழ்ச்சி! இந்து மத ஊழியருக்கு இறுதிச் சடங்கு செய்த இஸ்லாமிய குடும்பம்!!

பீகாரில் முகமது ரிஸ்வான் கான் என்பவர் தனது கடையில் வேலை பார்த்து வந்த இந்து மதத்தை சேர்ந்த முதியவர் உயிரிழந்ததையடுத்து, அவருக்கு இறுதிச்சடங்கு செய்து வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரிஸ்வான் பீகாரில் உள்ளாடைகள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். அவரது கடைக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பாக ராம்தேவ் ஷா (50) என்பவர் வேலைக்கு வந்தார்.
கடின வேலைகள் செய்ய முடியாவிட்டாலும் கணக்கு வழக்குகளை பார்க்க முடியும் என்று கூறி பணியில் சேர்ந்து சிறப்பாக பணியாற்றி வந்தார். வயது அதிகமானதால் அவரால் முன்பு போல பணியாற்ற முடியவில்லை.

இதையடுத்து, ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். சம்பளத்தை பற்றி கவலைப்பட வேண்டாம். மாதம் மாதம் சரியாக கொடுத்து விடுகிறேன் என்று ரிஸ்வான் உறுதி அளித்தார். அவருக்கு ஒரு பாதுகாவலர் போல அவர் இருந்தார்.
துரதிருஷ்டவசமாக அவர் இறந்துவிட்டதால் தங்களே இறுதிச்சடங்கு நடத்தியதாக ரிஸ்வான் தெரிவித்துள்ளார். இந்து மத சடங்குகளை பின்பற்றியே அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து அவருக்கு இறுதிச்சடங்கை நடத்தியதாக அவர் கூறியுள்ளார். ஒரு குழந்தை கீழே விழுந்து காயம் ஏற்பட்டால், உடனடியாக முதலுதவி சிகிச்சையையே செய்வோமே தவிர யாரும் ஜாதி, மதம் குறித்து கேள்வி எழுப்புவது கிடையாது என அவர் கூறியுள்ளார்.
newstm.in

