Theme Check

நெகிழ்ச்சி.. மாணவிக்கு ரூ.1.89 லட்சம் கடன்.. ஜாமீன் அளித்த ஐஏஎஸ் அதிகாரி..!

நெகிழ்ச்சி.. மாணவிக்கு ரூ.1.89 லட்சம் கடன்.. ஜாமீன் அளித்த ஐஏஎஸ் அதிகாரி..!

நெகிழ்ச்சி.. மாணவிக்கு ரூ.1.89 லட்சம் கடன்.. ஜாமீன் அளித்த ஐஏஎஸ் அதிகாரி..!
X

தனியார் செவிலியர் கல்லூரி மாணவிக்கு கல்விக் கடன் கிடைக்க ஐ.ஏ.எஸ். அதிகாரி ஜாமீன் அளித்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

சென்னையில் உள்ள தனியார் செவிலியர் கல்லூரியில் பட்டப்படிப்பு இறுதி ஆண்டு படித்து வரும் மாணவி மோகனப்பிரியா. இவரது பெற்றோர் தினக்கூலி வேலை செய்து வருகின்றனர். எனவே, கல்வியை தொடர கல்விக் கடன் கேட்டு தாட்கோவில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் விண்ணப்பித்து இருந்தார்.

அவருக்கு கடன் வழங்க, யாரும் ஜாமீன் போட முன்வரவில்லை. இதையறிந்த தாட்கோ மேலாண்மை இயக்குனர் கந்தசாமி, மாணவியின் கல்விக் கடனுக்கு, தானே சொந்த ஜாமீன்தாரராக கையொப்பம் இட்டுள்ளார்.

இதையடுத்து, மாணவிக்கு 1.89 லட்சம் ரூபாய் கல்விக் கடன் கிடைத்துள்ளது. மாணவி படிப்பை முடித்து, பணியில் சேர்ந்த பின், தாட்கோவில் கல்விக் கடனை திருப்பிச் செலுத்த வேண்டும் என, கந்தசாமி அறிவுரை வழங்கி உள்ளார்.

இதுபோன்று கல்விக் கட்டணம் செலுத்த இயலாத எஸ்.சி. பிரிவு மாணவ - மாணவியர், தாட்கோவில் விண்ணப்பித்து கல்விக் கடன் பெற்றுக் கொள்ளலாம் என, கந்தசாமி தெரிவித்துள்ளார்.

Next Story
Share it