Theme Check

கடவுளுக்கு மட்டுமே மரியாதை.. ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு..!

கடவுளுக்கு மட்டுமே மரியாதை.. ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு..!

கடவுளுக்கு மட்டுமே மரியாதை.. ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு..!
X

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள வடவன்பட்டி சண்டிவீரன் கோவிலில், தனிப்பட்ட நபருக்கு முதல் மரியாதை அளிக்கக் கூடாது என உத்தரவிடக் கோரி சேதுபதி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி நிர்மல்குமார் அமர்வு முன்பு இன்று நடைபெற்றது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கோவில் திருவிழாக்களில் யாருக்கும் முதல் மரியாதை கிடையாது என தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து, மனுதாரரின் கோரிக்கையை ஏற்று ‘கோவில்களில் முதல் மரியாதை என்பது கடவுளுக்கு மட்டுமே, மனிதனுக்கு அல்ல’ என்று கூறிய நீதிபதி, கோவிலில் யாருக்கு முதல் மரியாதை அளிக்க வேண்டாம்.

கோவிலில் யாருக்கும் முதல் மரியாதை அளிக்கப்பட வில்லை என்பதை அரசு தரப்பில் உறுதிப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

Next Story
Share it