Theme Check

குரூப் 2 எழுதுவோருக்கான கட்டுப்பாடுகள் வெளியீடு - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு..!!

குரூப் 2 எழுதுவோருக்கான கட்டுப்பாடுகள் வெளியீடு - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு..!!

குரூப் 2 எழுதுவோருக்கான கட்டுப்பாடுகள் வெளியீடு - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு..!!
X

, 2022ம் ஆண்டு நடைபெற உள்ள குரூப் 2, 2ஏ தேர்வு, மே 21-ம் தேதி காலை 9.30 மணிக்குத் தொடங்கி நடைபெறுகிறது.

மொத்தம் 116 நேர்காணல் கொண்ட பதவிகளுக்கும், நேர்காணல் இல்லாத 5,413 பதவிகளுக்கும் தேர்வு நடைபெற உள்ளது. நேர்காணல் கொண்ட பதவிகளுக்கு அதிகபட்சமாக ரூ.1.35 லட்சம் வரை ஊதியம் அளிக்கப்பட உள்ளது.

முதன்மைத் தேர்வுகள் தமிழ்நாட்டில் 32 மையங்களில், காலை 9 மணி முதல் 12:30 மணி வரை நடைபெற உள்ளது. மாநிலம் முழுவதும் 32 நகரங்களில் 117 மையங்களில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடைபெறும். இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் வெளியிட்டு இருந்தது.

இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

  • தமிழ்நாடு அரசுப் பணியார் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2, 2 ஏ தேர்வு எழுதுவோர் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
  • மேலும் முகக்கவசம் அணிந்து வருவோர் மட்டுமே தேர்வு மையத்தில் அனுமதிக்கப்படுவார்கள்.
  • இதுபோன்று தேர்வு எழுத வருவோர் ஸ்மார்ட் வாட்ச்களை அணிந்து வருவதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
Share it