கலவரம் எதிரொலி.. உளவுத் துறை ஐஜி உள்பட 7 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம் !!
கலவரம் எதிரொலி.. உளவுத் துறை ஐஜி உள்பட 7 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம் !!

தமிழகத்தில் 7 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உள்துறை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், உளவுத் துறை ஐஜி ஆசியம்மாள் பணிடமாற்றம் செய்யப்பட்டு அமலாக்கப்பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக உளவுத் துறை ஐஜியாக செந்தில் வேலனை நியமித்து உள்துறை செயலாளர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாநில மனித உரிமைகள் ஆணைய எஸ்.பி.யாக மகேஷ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் காவல் கண்காணிப்பாளராக ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை பூக்கடை காவல் துறை துணை ஆணையராக ஆல்பர்ட் ஜான் நியமிக்கப்பட்டுள்ளார். திருவல்லிக்கேணி காவல் துறை துணை ஆணையராக தேஷ்முக் சேகர் சஞ்சய் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை தொடர்பான போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்தது. இதனால் அரசு மீது எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். மேலும் உளவுத்துறை செயல் இழந்துவிட்டதாகவும் குற்றம்சாட்டினர். எனினும் அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் உளவுத்துறை ஐஜி உள்பட 7 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உள்துறை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
newstm.in

