Theme Check

எகிறிய விலை உயர்வு.. ரேஷன் கடைகள் மூலம் தக்காளி விற்பனை !

எகிறிய விலை உயர்வு.. ரேஷன் கடைகள் மூலம் தக்காளி விற்பனை !

எகிறிய விலை உயர்வு.. ரேஷன் கடைகள் மூலம் தக்காளி விற்பனை !
X

வெளிச்சந்தைகளில் தக்காளி விலை உயர்வினைக் கட்டுபடுத்தும் நடவடிக்கையாக அரசு பண்ணைப் பசுமை கடைகளில் மலிவு விலையில் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சென்னை கோயம்பேடு சந்தையில் கூட ஒருகிலோ தக்காளி 50 ரூபாயை தாண்டி விற்பனையாவதால், சில்லரை கடைகளில் அதைவிட அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் சிரமமடைந்து வருகின்றனர். தக்காளி விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

secretariate

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் பருவமழை காரணமாக தக்காளியின் விலை வெளிச்சந்தையில் உயர்ந்துள்ளது. அதனைக் கட்டுப்படுத்தி, மக்களுக்கு மலிவு விலையில் தரமான தக்காளி கிடைக்க, தமிழக அரசு கூட்டுறவுத்துறையின் 65 பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் விலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ஒரு கிலோ ரூ.70 முதல் ரூ.80 வரை விற்பனை செய்யப்படுகிறது.

secretariate

தக்காளியின் வெளிச்சந்தை விலை கட்டுப்படுத்தப்படும் வரை இந்நடவடிக்கை தொடரும். மேலும், தேவையின் அடிப்படையில் நியாயவிலைக் கடைகள் மூலமாகவும் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மே 23ஆம் தேதி வரை 18 மெட்ரிக் டன் தக்காளி ரூ.0.15 கோடி மதிப்பிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது, இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Next Story
Share it