விமான டிக்கெட் விலை உயரும் அபாயம்… அச்சத்தில் பயணிகள்!!
விமான டிக்கெட் விலை உயரும் அபாயம்… அச்சத்தில் பயணிகள்!!

விமான எரிபொருள் விலை மிகப் பெரிய அளவில் உயர்த்தப்பட்டுள்ளதால் டிக்கெட் கட்டணம் உயரும் என்று அஞ்சப்படுகிறது.
உக்ரைன் - ரஷ்யா பிரச்னையைத் தொடர்ந்து சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிரடியாக உயரத் தொடங்கியது. பெட்ரோல் - டீசல் விலை கடந்த சில நாட்களில் உயர்த்தப்படாமல் இருந்தாலும், விமான டிக்கெட் விலை உயர்த்த வாய்ப்பு இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
விமானங்களில் பயன்படுத்தப்படும் ஜெட் எரிவாயு விலை தற்போது வரலாறு காணாத அளவில் 18 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. விலை உயர்வுக்குப் பிறகு டெல்லியில் ஒரு கிலோ லிட்டர் விமான எரிபொருள் விலை ரூ.1,10,666.29 ஆக உயர்ந்துள்ளது. இது முந்தைய விலையை விட ரூ.17,135.63 அதிகமாகும்.

விமான எரிபொருள் விலை 17,000 ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளதால் விமான நிறுவனங்கள் அதிர்ச்சியடைந்துள்ளன. இது பொதுமக்களையும் வெகுவாகப் பாதிக்கும். விமான டிக்கெட் விலை அதிரடியாக உயர்த்தப்படும்.
கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பிரச்னையால் நிதி நெருக்கடியில் தவித்த இந்தியர்களுக்கு விமான டிக்கெட் உயர்ந்தால் மேலும் நெருக்கடி ஏற்படும். இதனால் விமானப் பயணங்களைத் தவிர்த்து பேருந்து, ரயில் போன்றவற்றில் செல்ல வாய்ப்பு உள்ளது.

விமான நிறுவனங்களுக்கான செலவுகளில் சுமார் 40 சதவீத பங்களிப்பை விமான எரிபொருள் கொண்டுள்ளது. கொரோனா பிரச்னையால் விமான நிறுவனங்களின் வருவாய் குறைந்துள்ள நிலையில், தற்போதைய விலையேற்றம் மேலும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.
newstm.in

