Theme Check

சினிமா டிக்கெட் முன்பதிவில் கொள்ளை.. முறைப்படுத்த தமிழக அரசுக்கு மீண்டும் கோரிக்கை !

சினிமா டிக்கெட் முன்பதிவில் கொள்ளை.. முறைப்படுத்த தமிழக அரசுக்கு மீண்டும் கோரிக்கை !

சினிமா டிக்கெட் முன்பதிவில் கொள்ளை.. முறைப்படுத்த தமிழக அரசுக்கு மீண்டும் கோரிக்கை !
X

ஆந்திராவில் திரைப்படங்களுக்கான டிக்கெட் விற்பனையை அரசு இணைதளம் மூலம் மட்டுமே செயல்படுத்த வேண்டும் என அம்மாநில அரசு அறிவித்தது. அதற்காக 2% மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும் என்ற அரசின் அறிவிப்புக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. எனினும் அந்த முறை இன்னும் முழுமையாக அமலுக்கு வரவில்லை.

தற்போது திரைப்பட டிக்கெட்களை Book My Show, ticket new, paytm போன்ற இணைதளங்கள் மூலம் முன்பதிவு செய்யலாம். இதற்காக அந்த நிறுவனங்கள் GSTயுடன் சேர்த்து ஒரு டிக்கெட்டிற்கு 35 ரூபாய் வசூலிக்கின்றன. இதற்கு நீண்டகாலமாகவே திரைத்துறையினர், ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பு உள்ளது.

theatre sdasd

தற்போதைய புள்ளி விவரம் ஒன்று கூறுகையில், கடந்த நான்கு மாதங்களில் மட்டும் இந்த நிறுவனங்கள் சுமார் 130 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதில் அரசுக்கு வரி செலுத்துவதில் இந்த நிறுவனங்கள் தவறான கணக்குகாட்டி மோசடி செய்வதாகவும் புகார் கூறுப்படுகிறது. இதை தடுக்க தமிழக அரசும் ஆன்லைன் முன்பதிவை ஏற்றுநடத்தும் நடைமுறையை கொண்டுவர கோரிக்கை வைக்கின்றனர்.

ஏற்கனவே திரையரங்குகளில் விற்கப்படும் தின்பண்டங்கள், தண்ணீர் பட்டில் உள்ளிட்டவை அதிக விலையில் உள்ளன. இந்த நிலையில் இணையதள முன்பதிவில் ஒரு டிக்கெட்டிற்கு 30 முதல் 40 ரூபாய் வரை கூடுதல் கட்டணம் வசூலிப்பது, ஒரு குடும்பத்தில் அல்லது நண்பர்கள் ஐந்து பேர் சென்றால் அதற்கான தொகை சுமார் 150 ரூபாய் வரை கூடுதலாக வசூலிக்கப்படுகிறது என ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

theatre sdasd

இந்த முறையிலும் மாற்றம் கொண்டுவரப்பட கோரிக்கை எழுந்துள்ளது. ஆந்திர மாநிலம் முன்னெடுத்துள்ள திரைப்பட டிக்கெட் ஒழுங்குமுறை நடவடிக்கைகளை தமிழகத்திலும் கொண்டு வர வேண்டும் என ரசிகர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

newstm.in

Next Story
Share it