ரொனால்டோ, மெஸ்ஸியின் சாதனையை நெருங்கும் விராட் கோலி - வீடியோ !!

ரொனால்டோ, மெஸ்ஸியின் சாதனையை நெருங்கும் விராட் கோலி - வீடியோ !!

ரொனால்டோ, மெஸ்ஸியின் சாதனையை நெருங்கும் விராட் கோலி - வீடியோ !!
X

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி, ரன் மெஷின் என பட்டப்பெயரால் அழைக்கப்படுகிறார். இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உண்டு. ஏன் பாகிஸ்தானில் கூட இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். களத்தில் கோலி அரை சதம் அடித்தாலே அது கட்டாயம் 100 ரன்களை தாண்டும் என்றளவுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பை கொடுப்பவர்.

இந்திய அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து அண்மையில் விலகினார். மேலும் அவரது பார்ம்மும் தற்போது பெரிதாக கூறும்படியான அளவில் இல்லை. எனினும் அவரது ரசிகர்களுக்கு சமூகவலைதளங்களில் உற்சாகத்தை கொடுத்துவருகிறார் விராட் கோலி.

virat kholi

அதாவது, மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் விராட் கோலிக்கு சமூக வலைதளங்களில் அது தொடர்ந்திருக்கிறது. அதன்படி இன்ஸ்டாகிராம் தளத்தில் இந்தியாவிலேயே அதிகளவிலான ஃபாலோவர்ஸ்களை கொண்ட முதல் இந்திய வீரர் என்ற நிலையின் மற்றொரு சாதனையை விராட் படைத்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் 200 மில்லியன் ஃபாலோவர்ஸ் கடந்த இந்திய வீரர் என்பதோடு முதல் இந்தியர் என்ற பெருமையையும் விராட் கோலி பெற்றிருக்கிறார். அதனை குறிப்பிடும் வகையில் தனது பதிவுகள் கொண்ட வீடியோவை வெளியிட்டு தனது ஃபாலோவர்ஸுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.

virat kholi

இதில் முக்கியமான அம்சம் என்னவென்றால் உலகளவில் அதிக ஃபாலோவர்ஸ்களை கொண்ட வீரர்கள் பட்டியலில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி மூன்றாவது இடத்தை பெற்றுள்ளார். முதல் இரண்டு இடத்தில் கால்பந்து விளையாட்டின் சூப்பர் ஸ்டார்களான கிறிஸ்டியானோ ரொனால்டோவும், லியோனல் மெஸ்ஸியும் 451 மில்லியன், 334 மில்லியன் முறையே ஃபாலோவர்ஸ்களை பெற்று முதல் இரண்டு இடத்தில் உள்ளனர். தற்போது இந்த பட்டியலில்தான் கோலி 3வதாக இணைந்துள்ளார். இது அவரது ரசிகர்களை பெருமளவில் மகிழ்ச்சியில் திகைக்கவைத்துள்ளது.

newstm.in

Tags:
Next Story
Share it