Theme Check

உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு ரொனால்டோவின் போர்ச்சுக்கல் அணி தகுதி !

உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு ரொனால்டோவின் போர்ச்சுக்கல் அணி தகுதி !

உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு ரொனால்டோவின் போர்ச்சுக்கல் அணி தகுதி !
X

22ஆவது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் வருகிற நவம்பர், டிசம்பரில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்கான தகுதி சுற்று பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. அந்த வகையில், இன்று நடைபெற்ற தகுதி சுற்று ஆட்டத்தில் பலம் வாய்ந்த போர்ச்சுக்கல் மற்றும் நார்த் மசிடோனியா அணிகள் மோதின.

இந்த போட்டியில் எதிர்பார்த்தது போன்றே போர்ச்சுக்கல் அணி ஆதிக்கம் செலுத்தியது. போட்டி தொடங்கியதும் ஆட்டத்தில் 32ஆவது நிமிடம், 65 ஆவது நிமிடங்களில் போர்ச்சுக்கல் அணியின் பர்னோ பெர்னாண்டஸ் கோல் அடித்தார். இதற்கு பதிலடி கொடுக்க எதிரணி வீரர்கள் போராடியும் கோல் அடிக்க முடியவில்லை .

ronaldo

இதனால் 2-0 என்ற கோல் கணக்கில் போர்ச்சுக்கல் அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியினால் கத்தாரில் வருகிற நவம்பர், டிசம்பரில் நடைபெறும் உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு போர்ச்சுக்கல் தகுதி பெற்றது. இதனை போர்ச்சுக்கல் அணி வீரர்கள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள கால்பந்து நட்சத்திர வீரர் ரொனால்டோவின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

newstm.in

Tags:
Next Story
Share it