Theme Check

சித்திரை திருவிழா நெரிசலில் சிக்கி இறந்த 2 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிதி..!!

சித்திரை திருவிழா நெரிசலில் சிக்கி இறந்த 2 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிதி..!!

சித்திரை திருவிழா நெரிசலில் சிக்கி இறந்த 2 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிதி..!!
X

மதுரையில் உலகப்புகழ் பெற்ற சித்திரைத்திருவிழாவையொட்டி, இன்று கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு நடந்தது.

கொரோனா தொற்று பரவலை தொடர்ந்து 2 ஆண்டுகளுக்குப் பிறகு கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு கோலாகமாக நடந்தது.இந்நிலையில், அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியின் போது வைகை ஆற்றின் கரை அருகே திடீரென பயங்கர கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 5-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர்.மயக்கம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த நிகழ்வில் தற்போது இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி இறந்த 2 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதோடு, படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சமும், லேசான காயமடைந்த 11 பேருக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.


Next Story
Share it