Theme Check

பணம் எடுத்து தருவது போல் நடித்து ரூ.1.5 லட்சம் அபேஸ்!

பணம் எடுத்து தருவது போல் நடித்து ரூ.1.5 லட்சம் அபேஸ்!

பணம் எடுத்து தருவது போல் நடித்து ரூ.1.5 லட்சம் அபேஸ்!
X


திருச்சி அண்ணா நகரைச் சேர்ந்தவர் பொன்னையன் (56). இவர் சில தினங்களுக்கு முன் ஒரு வங்கி ஏடிஎம்முக்கு பணம் எடுக்க சென்றிருக்கிறார். அப்போது அங்கிருந்த ஒரு நபரிடம் தனக்கு ஏடிஎம்மில் பணம் எடுக்க உதவுமாறு கேட்டிருக்கிறார். அந்த ஆசாமி உதவி செய்வதுபோல் நடித்து பொன்னையனின் ஏடிஎம் கார்டை மாற்றி கொடுத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருக்கிறார்.

சில நாட்களுக்கு பிறகு பொன்னையனின் கணக்கிலிருந்து திருடப்பட்ட ஏடிஎம் கார்டு மூலம் ரூ.1.5 லட்சம் எடுக்கப்பட்டிருக்கிறது. இதனை அறிந்த பொன்னையன் இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் செய்திருக்கிறார். புகாரை ஏற்ற காவல்துறை உதவி ஆய்வாளர் நாகராஜன் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.

இந்த விசாரணையில் திண்டுக்கல் மாவட்டம் சேர்ந்த பன்னீர்செல்வம் தான் (வயது 26) பொன்னையனின் ஏடிஎம் மூலம் பணத்தை எடுத்திருப்பது தெரிய வந்திருக்கிறது. இதனையடுத்து பன்னீர்செல்வத்தை போலிஸார் கைது செய்தனர்.

Next Story
Share it