Theme Check

வங்கி கணக்குக்கு வந்த ரூ.15 லட்சம்.. மோடிக்கு நன்றி தெரிவித்த விவசாயி.. அப்புறம் நடந்தது என்ன தெரியுமா..?

வங்கி கணக்குக்கு வந்த ரூ.15 லட்சம்.. மோடிக்கு நன்றி தெரிவித்த விவசாயி.. அப்புறம் நடந்தது என்ன தெரியுமா..?

வங்கி கணக்குக்கு வந்த ரூ.15 லட்சம்.. மோடிக்கு நன்றி தெரிவித்த விவசாயி.. அப்புறம் நடந்தது என்ன தெரியுமா..?
X

மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் மாவட்டம் பைதான் தாலுகாவில் வசிப்பவர் ஞானேஸ்வர் ஓட். இவர், அப்பகுதியில் உள்ள பாங்க் ஆப் பரோடா வங்கிக் கிளையில் ஜன்தன் கணக்கு வைத்திருந்தார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி, ஞானேஸ்வர் வங்கிக்கணக்கில் ரூ.15 லட்சம் பணம் டெபாசிட் ஆனது.

இதனையறிந்த ஞானேஸ்வர், தேர்தலின்போது பிரதமர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டதாக எண்ணியதுடன், பணம் டெபாசிட் செய்ததற்கு நன்றி தெரிவித்து பிரதமருக்கு கடிதம் எழுதினார். மேலும், தனது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.9 லட்சத்தை எடுத்து புதிதாக வீடு கட்டினார்.
The farmer who thought he got ₹15 lakh from Modi - The Outreach News
ஆனால், உண்மையில் அந்த பணம் பிம்பல்வாடி கிராம பஞ்சாயத்தில் வளர்ச்சி பணிகளுக்கு ஒதுக்கப்பட்டது. தவறுதலாக ஞானேஸ்வர் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டது. 4 மாதங்களாக பணம் வராததை அறிந்த பஞ்சாயத்து நிர்வாகத்தினர் வங்கியில் விசாரித்தபோது, நடந்த தவறு தெரியவந்தது.

இதுகுறித்து வங்கி அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. தங்கள் மீது உள்ள தவறை உணர்ந்துகொண்ட அதிகாரிகள், பணத்தை திருப்பி கொடுக்கும்படி ஞானேஸ்வருக்கு நோட்டீஸ் அனுப்பினர்.
Trending news: 15 lakhs came in Jan Dhan account... the farmer of  Maharashtra got the house built for 9 lakhs, what is the full story -  Hindustan News Hub
அத்துடன், அவருடைய வங்கிக் கணக்கில் மீதம் இருந்த ரூ.6 லட்சத்தை வங்கி எடுத்து கொண்டது. வீடு கட்டுவதற்கு செலவிட்ட ரூ. 9 லட்சத்தை எப்படி திருப்பி கட்டுவது என ஞானேஸ்வரும், அவரிடம் இருந்து பணத்தை எப்படி திருப்பி வாங்குவது என அதிகாரிகளும் குழப்பத்தில் உள்ளனர்.

Next Story
Share it