Theme Check

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.15 லட்சம்.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.15 லட்சம்.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.15 லட்சம்.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!
X

நெல்லை மாவட்டம் அடைமிதிப்பான்குளம் பகுதியில் உள்ள தனியார் கல்குவாரியில் கடந்த 14-ம் தேதி இரவு சுமார் 400 அடி ஆழத்தில் கற்களை அள்ளும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, திடீரென பாறைகள் சரிந்து விழுந்தன.

இதில், அங்கு பணியில் ஈடுபட்டிருந்த செல்வகுமார் (30), ராஜேந்திரன் (35), செல்வம் (27), முருகன் (40), விஜய் (27), ஆயன்குளத்தை சேர்ந்த முருகன் (23) ஆகிய 6 பேர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கயிறு மூலம் குவாரிக்குள் இறங்கி 6 பேரையும் மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது இடிபாடுகளில் சிக்கி லேசான காயம் அடைந்த முருகன், விஜய் ஆகிய 2 பேரையும் மீட்டு மேலே கொண்டு வந்து சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

18 மணி நேர போராட்டத்திற்கு பிறகு 3வது நபர் செல்வம் பத்திரமாக மீட்கப்பட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். குவாரியில் இருந்து 4வது நபராக மீட்கப்பட்ட முருகன் என்பவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில், நெல்லை கல்குவாரி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 15 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “நெல்லை மாவட்டம் அடைமிதிப்பான்குளம் பகுதியில் உள்ள தனியார் கல்குவாரி விபத்தில் உயிரிழந்த முருகன் மற்றும் செல்வம் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்.

மேலும், அவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் தலா ரூ.10 லட்சமும், தொழிலாளர் நல வாரியம் சார்பில் ரூ. 5 வழங்கப்படும்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story
Share it