Theme Check

சென்னையில் மட்டும் இதுவரை ரூ.1.6 கோடி பறிமுதல்!!

சென்னையில் மட்டும் இதுவரை ரூ.1.6 கோடி பறிமுதல்!!

சென்னையில் மட்டும் இதுவரை ரூ.1.6 கோடி பறிமுதல்!!
X

சென்னையில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தமிழகம் முழுதும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு, பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதை அடுத்து சென்னை முழுதும் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த அரசியல் விளம்பர பேனர்கள், போஸ்டர்கள் அகற்றப்பட்டு, சுவர் விளம்பரங்களும் அழிக்கப்பட்டன.

வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்கும் விதமாக, மண்டலம் தோறும்,பறக்கும் படை அமைக்கப்பட்டு சோதனைதீவிரப்படுத்தப்படுஉள்ளது.

money 1

உதவி செயற்பொறியாளர், இரு காவலர்கள், ஒளிப்பதிவாளர் உட்பட நான்கு பேர் என, மண்டலம் ஒன்றிற்கு மூன்று குழு வீதம், 45 குழுக்கள் அமைக்கப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், உரிய ஆவணங்களின்றி எடுத்துவரப்படும் பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி, சென்னையில் இதுவரை ஒரு கோடியே 6 லட்சத்து 52ஆயிரத்து 710 ரூபாய் ரொக்கம், தங்கம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

newstm.in

Next Story
Share it