ரூ.200.. செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடக்கம் !!

ரூ.200.. செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடக்கம் !!

ரூ.200.. செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடக்கம் !!
X

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இணைய தளம் மூலம் தொடங்கியுள்ளது.

இந்திய வரலாற்றில் முதன் முறையாக தமிழ்நாட்டில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறவுள்ளது. சர்வதேச அளவிலான 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் வரும் 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

chess

இப்போட்டியில் சர்வதேச அளவில் 186 நாடுகளைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட சதுரங்க விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடர்பான அறிவிப்பை அகில இந்திய செஸ் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது. 2 அரங்கில் போட்டிகளில் நடைபெறுவதால் தனித் தனியார் டிக்கெட் விற்பனை செய்யப்படவுள்ளது. முதல் இடத்திற்கு ரூ.300 முதல் ரூ.3 ஆயிரம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 2வது இடத்தில் ரூ.200 முதல் ரூ. 2 ஆயிரம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

chess

பொதுமக்கள் https://tickets.aicf.in என்ற இணையதளம் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Tags:
Next Story
Share it