Theme Check

ரூ. 200-க்கு காய்கறி வாங்குபவர்களுக்கு தக்காளி, தேங்காய் இலவசம்!!

ரூ. 200-க்கு காய்கறி வாங்குபவர்களுக்கு தக்காளி, தேங்காய் இலவசம்!!

ரூ. 200-க்கு காய்கறி வாங்குபவர்களுக்கு தக்காளி, தேங்காய் இலவசம்!!
X

சிங்கம்புணரி பேரூராட்சியில் திண்டுக்கல் சாலையில் நீண்ட காலமாக மூடப்பட்டிருந்த உழவர் சந்தை, தொடர்ந்து மக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த 7-ம் தேதி மீண்டும் திறக்கப்பட்டது.

Vegetables

மேலும் வியாபாரிகள் சாலையோரங்களில் கடை அமைப்பதை தடுக்கும் வகையில், அவர்களுக்கும் உழவர் சந்தை வளாகத்திலேயே கடைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த நிலையில் உழவர் சந்தைக்கு தொடர்ந்து வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் நேற்று ரூ.200-க்கு காய்கறிகள் வாங்கியவர்களுக்கு 1 கிலோ தக்காளி, 1 தேங்காய் இலவசமாக வழங்கப்பட்டது. தக்காளியை உதவி வேளாண்மை அலுவலர் காந்தி, தேங்காயை தொழிலதிபர் செல்வம் ஆகியோர் வழங்கினர்.

Singampunari

இதேபோல் அடுத்த 2 நாட்களுக்கு (ஜூலை 15) வரை ரூ. 200-க்கு காய்கறிகள் வாங்குவோருக்கு 1 கிலோ தக்காளி, 1 தேங்காய் இலவசமாக வழங்குவதாக திமுக நகரச் செயலாளர் கதிர்வேல் அறிவித்துள்ளார்.

Next Story
Share it