பிரபல நடிகை வீட்டில் ரூ.2.4 கோடி மதிப்பிலான நகை, பணம் கொள்ளை !!
பிரபல நடிகை வீட்டில் ரூ.2.4 கோடி மதிப்பிலான நகை, பணம் கொள்ளை !!

நடிகை சோனம் கபூரின் வீட்டில் இருந்து ரூ.2.4 கோடி மதிப்பிலான நகை, பணம் கொள்ளை போயுள்ளது.
இந்தி திரையுலகில் பிரபல நடிகையாக சோனம் கபூர் வலம் வருகிறார். பிரபல நடிகர் அனில் கபூரின் மகளான சோனம் கபூர், ஆனந்த் அகுஜா என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்துக்கு பிறகு இருவரும் டெல்லியில் வசித்து வருகின்றனர். கர்ப்பிணியாக உள்ள இவர், அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 11ஆம் தேதி இவர்களது வீட்டில் இருந்து நகை மற்றும் பணம் கொள்ளை போயுள்ளது. ஆனால், கொள்ளை சம்பவம் நடந்து 2 வாரங்களுக்கு பின்னர், கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி அவர்கள் போலீசில் புகார் அளித்து உள்ளனர். இதனையடுத்து கொள்ளை குறித்தும், கொள்ளையர்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுபற்றி போலீசார் கூறுகையில், டெல்லியில் உள்ள அம்ரிதா ஷெர்கில் மார்க் பகுதியில் ஹரீஷ் அகுஜாவின் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்டது பற்றி நடப்பு 2022ம் ஆண்டு, பிப்ரவரி 23ஆம் தேதி புகார் அளிக்கப்பட்டது. புகாரில், வீட்டில் இருந்து ரூ.2.4 கோடி மதிப்பிலான நகை மற்றும் பணம் கொள்ளை போயுள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த பிப்ரவரி 11ஆம் தேதியே அவர்கள் அதனை கவனித்துள்ளனர். விசாரணைக்கு குழுக்கள் அமைக்கப்பட்டு சாட்சிகள் விசாரணை, அடுத்த கட்ட விசாரணை என தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்பு, சோனம் கபூரின் மாமனரான ஹரீஷ் அகுஜாவிடம் மோசடி கும்பல் ஒன்று ரூ.27 கோடி மோசடி செய்திருந்தது. இதுபற்றி கடந்த ஆண்டு ஜூலையில் போலீசில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், நடிகை சோனம் கபூரின் வீட்டில் இருந்து ரூ.2.4 கோடி மதிப்பிலான நகை மற்றும் பணம் கொள்ளை போயுள்ள சம்பவம் தெரிய வந்துள்ளது.
newstm.in

