Theme Check

ரூ. 3 கோடி மதிப்புள்ள செம்மர கட்டை கடத்தல்…!! தமிழ்நாட்டை சேர்ந்த 7 பேர் கைது!!

ரூ. 3 கோடி மதிப்புள்ள செம்மர கட்டை கடத்தல்…!! தமிழ்நாட்டை சேர்ந்த 7 பேர் கைது!!

ரூ. 3 கோடி மதிப்புள்ள செம்மர கட்டை கடத்தல்…!! தமிழ்நாட்டை சேர்ந்த 7 பேர் கைது!!
X

ஆந்திர மாநிலம் சித்தூர் வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டி கடத்தியதாக ஆந்திர காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் குடிபாலா சோதனைச் சாவடி அருகே நேற்று மதியம் முதல் மாலை வரை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த ஒரு வேனில் சோதனை செய்தபோது செம்மரக்கட்டை இருப்பது தெரியவந்தது.

வேனில் பயணித்த இருவரை பிடித்து விசாரணை நடத்தியதில் முக்கிய குற்றவாளியான கோவிந்தசாமி என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் மேலும் இரண்டு வாகனங்களில் செம்மர கட்டைகள் கடத்துவது தெரியவந்தது. தொடர்ந்து பின்னால் வந்து கொண்டிருந்த இரண்டு வாகனங்களையும் நிறுத்தி சோதனை செய்ததில் செம்மரம் இருப்பது தெரியவந்தது.

7-arrested-from-Andhra-Pradesh-for-cutting-semmaram

இதனையடுத்து மூன்று வாகனங்களில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்ட திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த கோவிந்தசாமி, முருகேசன், பெருமாள், ராமன் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த கொலச்சான், வெங்கடேஷ், கோவிந்தராஜ் ஆகிய 7 பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 2275 கிலோ எடை கொண்ட 89 செம்மரக்கட்டைகள் கடத்தலுக்கு பயன்படுத்திய 3 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகளின் மதிப்பு ரூ. 3 கோடி இருக்கும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags:
Next Story
Share it