முதல்வர் பாதுகாப்புக்கு ரூ.33 லட்சம் செலவில் கார்.. எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு..!
முதல்வர் பாதுகாப்புக்கு ரூ.33 லட்சம் செலவில் கார்.. எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு..!

கேரளாவில், முதல்வர் பினராயி விஜயனுக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அவரது பாதுகாப்புக்காக நவீன வசதிகள் உடைய மேலும் ஒரு கார் வேண்டும் என, டிஜிபி அனில் காந்த் பரிந்துரை செய்திருந்தார்.
இதையடுத்து, முதல்வரின் பாதுகாப்புக்காக 33 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 'கார்னிவல் லிமோசின்' என்ற கார் வாங்க கேரள உள்துறை செயலர் சமீபத்தில் ஒப்புதல் அளித்தார்.
முதல்வர் பினராயி விஜயனின் பாதுகாப்புக்காக ஒரு 'டாடா ஹாரியர்' மற்றும் மூன்று 'இன்னோவா கிரிஸ்டா' கார்கள் வாங்க ஆறு மாதத்துக்கு முன் முடிவு செய்யப்பட்டு இருந்தது.
இந்நிலையில் தற்போது, டாடா ஹாரியருக்கு பதிலாக கார்னிவல் லிமோசின் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனால், ஏற்கனவே கேரள அரசு நிதி பற்றாக்குறையில் தள்ளாடும் போது, முதல்வரின் பாதுகாப்புக்கு நவீன ரக கார்கள் வாங்கும் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.

