கூட்டுறவு சங்கங்களில் ரூ.482 கோடி முறைகேடு!! அமைச்சர் ஐ.பெரியசாமி குற்றச்சாட்டு
கூட்டுறவு சங்கங்களில் ரூ.482 கோடி முறைகேடு!! அமைச்சர் ஐ.பெரியசாமி குற்றச்சாட்டு

அதிமுக ஆட்சியில் 780 கூட்டுறவு சங்கங்களில் ரூ.482 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
கூட்டுறவுத்துறை மீதான மானிய கோரிக்கைக்கு பதிலளித்துப் பேசிய ஐ.பெரியசாமி, இந்த முறைகேடு தொடர்பாக முதல்வருடன் ஆலோசித்து கண்டிப்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
மேலும், கூட்டுறவு சங்கங்களில் ரூ. 4,816 கோடிக்கான நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 37 ஆயிரம் பேருக்கான நகைக்கடன் விரைவில் தள்ளுபடி செய்யப்படும் என்றும் அமைச்சர் ஐ.பெரியசாமி உறுதி அளித்திருக்கிறார்.
Next Story

