Theme Check

கூட்டுறவுத்துறையில் ரூ.750 கோடி மோசடி.. அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்..!

கூட்டுறவுத்துறையில் ரூ.750 கோடி மோசடி.. அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்..!

கூட்டுறவுத்துறையில் ரூ.750 கோடி மோசடி.. அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்..!
X

கடந்த அதிமுக ஆட்சியில், கூட்டுறவுத் துறையில் நடந்த 750 கோடி ரூபாய் மோசடி தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.

திண்டுக்கல்லில், கூட்டுறவு துறை சார்பாக கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டது. இந்த நிகழ்வில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வுக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் 5 கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. ஆனால், திமுகவின் ஒரு வருட ஆட்சியில் 33 கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் கூட்டுறவுத் துறையில் நடந்த 750 கோடி ரூபாய் மோசடி தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மோசடி செய்தவர்களை விசாரணைக் குழு கண்டறிந்தபின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடப்படும்.

மேலும், கூட்டுறவுத்துறையில் தவறு நடக்காதவாறு வெளிப்படை தன்மையுடன் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படும். தகுதியானவர்களுக்கு மட்டும் பணி வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.

Next Story
Share it