டி20 தொடரில் இருந்து ருதுராஜ் கெய்க்வாட் நீக்கம்!!
டி20 தொடரில் இருந்து ருதுராஜ் கெய்க்வாட் நீக்கம்!!

இந்தியா, இலங்கை இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இந்தியா 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்திய அணி வீரர்கள் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் ஆகியோர் ஓய்வுக்கு சென்றதால், ருதுராஜுக்கு நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் நீக்கப்பட்டார்.
இதுகுறித்துப் பேசிய இந்திய அணிக் கேப்டன் ரோஹித் ஷர்மா, ருதுராஜுக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்றுதான் எண்ணியிருந்தோம். ஆனால், அவருக்கு கையில் காயம் ஏற்பட்ட காரணத்தினால், போட்டியில் களமிறங்க மாட்டார் எனத் தெரிவித்தார்.

ருதுராஜ் கெய்க்வாட்டின் காயம் குறித்த தகவல் எதுவும் வெளியாகாமல் இருந்திருந்தது. இந்நிலையில், இந்த பிரச்னை காரணமாக ருதுராஜ், இலங்கை டி20 தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு மாற்றாக மயங்க் அகர்வால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. இலங்கை அணியுடன் இன்னும் 2 டி20 போட்டிகளில் இந்திய அணி மோத உள்ளது.
newstm.in

