Theme Check

ரஷ்யா தாக்குதல்.. உக்ரைனுக்கு இத்தனை ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் சேதமா?

ரஷ்யா தாக்குதல்.. உக்ரைனுக்கு இத்தனை ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் சேதமா?

ரஷ்யா தாக்குதல்.. உக்ரைனுக்கு இத்தனை ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் சேதமா?
X

உக்ரைன் - ரஷ்யாவுக்கும் இடையேயான போர் இரண்டு வாரங்களாக நடந்து கொண்டிருக்கிறது. உக்ரைன் தலைநகர் கீவ், கார்கிவ் போன்ற முக்கிய நகரங்களைக் குறிவைத்து ரஷ்யா துல்லியத் தாக்குதல் நடத்திக்கொண்டிருக்கிறது. இருப்பினும், ரஷ்யாவின் பலம்பொருந்திய தாக்குதலைத் உக்ரைன் மிகக்கடுமையாக போராடி எதிர்கொண்டுவருகிறது.

ரஷ்யாவே எதிர்பாராதவகையில், உக்ரைனின் பதிலடித் தாக்குதல் இருப்பதாக கூறப்படுகிறது. நாளுக்கு நாள் தீவிரமடைந்துகொண்டிருக்கும் இந்தப் போரால் இரு நாடுகளும் இழப்புகளை சந்தித்து வருகின்றன. இந்த நிலையில், ரஷ்யாவின் படையெடுப்பின் காரணமாக உக்ரைன் நாட்டுக்கு சுமார் 10 பில்லியன் டாலர் (இந்திய மத்திப்பில் ரூ.77,000 கோடி) சேதம் ஏற்பட்டுள்ளதாக உக்ரைனின் உள்கட்டமைப்பு அமைச்சர் அலெக்சாண்டர் குப்ராகோவ் தெரிவித்தார்.

russia attack

தொடர்ந்து பேசிய உக்ரைன் அமைச்சர் அலெக்சாண்டர் குப்ராகோவ், ரஷ்யா படையெடுப்பின் காரணமாக உக்ரைன் நாட்டின் உள்கட்டமைப்புக்கு சுமார் 10 பில்லியன் டாலர் சேதம் ஏற்பட்டுள்ளது, இந்த எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை வரை கணக்கிடப்பட்டது. பெரும்பாலான சேதமடைந்த கட்டமைப்புகள் ஒரு ஆண்டில் சரிசெய்யப்படும், மிகவும் கடினமானவை இரண்டு ஆண்டுகளில் சரிசெய்யப்படும்.

ஞாயிற்றுக்கிழமையன்று கிழக்கு நகரமான கார்கிவில் இருந்து 40,000 பேர் வெளியேற்றப்பட்டனர். ஆனால், பொதுமக்கள் மற்ற நகரங்களை விட்டு வெளியேற அனுமதிக்குமாறு ரஷ்யாவிடம் உக்ரைன் வேண்டுகோள் விடுத்துள்ளது, எனத் தெரிவித்தார்.

russia attack

தீவிரமாக தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யாவுக்கு பல்வேறு நாடுகள், நிறுவனங்கள் அதிரடியாக பொருளாதார தடை விதித்து வருவது குறிப்பிடத்தக்கது.

newstm.in

Next Story
Share it