Theme Check

#BIG NEWS :- தியேட்டர் மீது ரஷ்யா தாக்குதல்.. தஞ்சம் புகுந்த ஆயிரக்கணக்கானோர் நிலை என்ன..?

#BIG NEWS :- தியேட்டர் மீது ரஷ்யா தாக்குதல்.. தஞ்சம் புகுந்த ஆயிரக்கணக்கானோர் நிலை என்ன..?

#BIG NEWS :- தியேட்டர் மீது ரஷ்யா தாக்குதல்.. தஞ்சம் புகுந்த ஆயிரக்கணக்கானோர் நிலை என்ன..?
X

உக்ரைனின் பல நகரங்கள் மீது 22வது நாளாக ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால், லட்சக்கணக்கான மக்கள் அண்டை நாடுகளுக்கு புகலிடம் தேடிச் சென்றுள்ளனர்.

மேலும், ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். மரியபோல் நகரில் 2,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மரியபோல் நகரில் ரஷ்யாவின் தாக்குதலுக்கு பயந்தும், வீடுகளை இழந்தோரும் தியேட்டர் ஒன்றில் தங்கியிருந்தனர். இந்த தியேட்டர் மீது ரஷ்ய விமானங்கள் தாக்குதல் நடத்தின.
Ukraine Theatre Housing Over 1,000 Bombed Russia Denies Attack 10 Facts  With ICJ Statement - Ukraine में 1000 लोगों का घर बने थिएटर पर बमबारी,  Russia ने किया इंकार, 10 बड़ी बातें | World News In Hindi
இதில், அந்த தியேட்டர் நொறுங்கியது. இதில் எத்தனை பேர் உயிரிழந்தனர், காயமடைந்தனர் என்பது குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.

அங்கு தாக்குதல் நடந்துள்ளதாக உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தாக்குதலுக்கு உள்ளான தியேட்டர் கட்டடத்தின் முன்பக்கத்தில் ரஷ்ய மொழியில் குழந்தைகள் என எழுதப்பட்டிருந்தது.

அதே நேரத்தில், இந்தத் தாக்குதலை நாங்கள் நடத்தவில்லை என தெரிவித்துள்ள ரஷ்யா, பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் தாக்குதல் நடத்தவில்லை எனவும் கூறியுள்ளது.

Next Story
Share it