Theme Check

உக்ரைன் டிவி டவர் மீது ரஷ்யா தாக்குதல் – 9 பேர் பலி!!

உக்ரைன் டிவி டவர் மீது ரஷ்யா தாக்குதல் – 9 பேர் பலி!!

உக்ரைன் டிவி டவர் மீது ரஷ்யா தாக்குதல் – 9 பேர் பலி!!
X

உக்ரைனின் ரைவ்னே நகருக்கு வெளியே தொலைக்காட்சி கோபுரம் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்று அதிகாலை தொலைக்காட்சி கோபுரம் மீது இரண்டு ஏவுகணைகள் ஏவப்பட்டதாக கூறப்படுகிறது. உக்ரைனின் மேற்கு பகுதியில் உள்ள ரைவ்னே நகருக்கு வெளியே அமைந்துள்ள தொலைக்காட்சி கோபுரம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ukraine tower

இதில் 9 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் 9 பேர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இடிபாடுகளிடையில் சிக்கிக்கொண்டிருப்போரை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

ரஷ்யாவின் ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள டான்பாஸ் பகுதியில் தொடர்ந்து கடுமையான சண்டை நடைபெற்று வருகிறது. இதில் 100 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், 6 வாகனங்கள் சேதமடைந்ததாவும் உக்ரைன் படைகள் சார்பில் கூறப்படுகிறது.

ukraine tower

இதற்கிடையில் ரஷ்யா போர்க்குற்றங்களில் ஈடுபடுவதாக சர்வதேச நீதிமன்றத்தில் உக்ரைன் தொடர்ந்த வழக்கில் நாளை மார்ச் 16 அன்று உத்தரவு பிறப்பிக்கப்படும் என ரஷ்ய செய்தி நிறுவனமான ஸ்புட்னிக் தெரிவித்துள்ளது.

newstm.in

Next Story
Share it