Theme Check

குண்டுமழை பொழியும் ரஷ்யா.. சுரங்கத்தில் பாதுகாக்கப்படும் பச்சிளம் குழந்தைகள் !!

குண்டுமழை பொழியும் ரஷ்யா.. சுரங்கத்தில் பாதுகாக்கப்படும் பச்சிளம் குழந்தைகள் !!

குண்டுமழை பொழியும் ரஷ்யா.. சுரங்கத்தில் பாதுகாக்கப்படும் பச்சிளம் குழந்தைகள் !!
X

உக்ரைனில் போரின் தீவிரம் மேலும் அதிகரித்துள்ள நிலையில், பச்சிளம் குழந்தைகள் சுரங்க அறைகளில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகின்றனர்.

ரஷ்யாவின் எல்லையில் உள்ளது உக்ரைன். இரு நாடுகள் இடையே அண்மைக்காலமாகவே பதற்றம் நீடித்து வந்தது. நேட்டோ படையில் சேரக்கூடாது என பல்வேறு வலியுறுத்தல்களுடன், பதற்றத்துக்கு மத்தியில் உக்ரைன் மீது தாக்குதலை தொடங்கியிருக்கிறது ரஷ்யா.

ரஷ்யா குண்டுகளை வீசி வரும் நிலையில் உக்ரைனில் பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருகிறது. அமெரிக்கா, பிரிட்டன் உள்பட பல்வேறு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தப்போதும் ரஷ்யா தனது தாக்குதலை நிறுத்தவில்லை. மாறாக தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது.

russia attack

இந்நிலையில், உக்ரைன் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு தப்பியோடி வருகின்றனர். அதாவது உக்ரைனில் எல்லை வீடுகள், கட்டிடங்களிலும் சுரங்க அறை இருப்பது வழக்கம். இரண்டாம் உலகப்போரின் காலத்தில் இருந்து இந்த முறை அங்கு உள்ளது.

இந்த நிலையில், பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளில் உள்ள சுரங்கத்துக்குள் பதுங்கி தப்பிவருகின்றனர். அவ்வாறு இல்லாதவர்கள் வீதிகளில் தவிக்கும் நிலையும், மெட்ரோ ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் தங்சம் அடைந்துள்ளனர். இந்த நிலையில், கிழக்கு உக்ரைனில் உள்ள நைப்ரோ என்ற இடத்தில் மருத்துவமனைகளில் பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கான வார்டு சுரங்க அறைக்கு மாற்றப் பட்டுள்ளது. சுரங்க அறையில் தீவிர சிகிச்சைப் பிரிவு அமைக்கப்பட்டு, அங்கு பச்சிளம் குழந்தைகளை செவிலியர்கள் பராமரித்து வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it