இலங்கை நெருக்கடிக்கு ரஷ்யாவே காரணம் : உக்ரைன் அதிபர்!!
இலங்கை நெருக்கடிக்கு ரஷ்யாவே காரணம் : உக்ரைன் அதிபர்!!

இலங்கை உட்பட உலகின் பல நாடுகளின் பொருளாதார நெருக்கடிக்கு உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பே காரணம் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார்.
கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை முழுவதும் வன்முறை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், கோத்தபய ராஜினாமா செய்யாமல் ரகசியமாக மாலத்தீவுக்கு தப்பியோடினார். அங்கும் மக்கள் எதிர்ப்பு வலுக்கவே அங்கிருந்து சிங்கப்பூர் சென்றுள்ளார்.
இந்த நிலையில் இலங்கை நிலைமை குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கருத்து ஒன்றை பதிவு செய்திருக்கிறார். அதில், இலங்கை உட்பட உலகின் பல இடங்களில் நெருக்கடி நிலவுவதற்கு உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பே காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

உக்ரைன் மீது படை எடுத்து உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடியை ரஷ்யா ஏற்படுத்தி இருக்கிறது. இதனை ரஷ்யாவின் தந்திரம் என்றே கூறலாம். உலகம் முழுவதும் உணவுப் பொருட்கள், எரிவாயு விலை அதிகரித்து வருகிறது. இது எப்போது முடியும் என்று யாருக்கும் தெரியாது என்று கூறியுள்ளார்.
உக்ரைனில் நடக்கும் போர் காரணமாக சுமார் 94 நாடுகளில் குறைந்த வருவாய் கொண்ட சுமார் 100 கோடிக்கும் அதிகமான மக்கள் உணவு மற்றும் எரிவாயு நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன என செலன்ஸ்கி கூறியுள்ளார்.
newstm.in

