உக்ரைன் அரசு கட்டிடத்தில் ஏவுகணை வீசிய ரஷ்யா.. பதறவைக்கும் வீடியோ வெளியானது !!
உக்ரைன் அரசு கட்டிடத்தில் ஏவுகணை வீசிய ரஷ்யா.. பதறவைக்கும் வீடியோ வெளியானது !!

உக்ரைனின் சுதந்திர சதுக்கத்தில் ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதல் தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 6ஆவது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று முதல் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இன்று ரஷியா ராக்கெட் வெடிகுண்டு மூலம் தாக்குதல் நடத்தி வருவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.
கெர்சன், கார்கீவ், தலைநகர் கீவ் ஆகியவற்றின் மீது ரஷிய ராணுவம் தாக்குதலை அதிகரித்துள்ளது. இந்த நிலையில், தற்போது உக்ரைனின் கார்கிவ் நகரின் மத்தியில் அமைந்துள்ள சுதந்திர சதுக்கத்தில் (Freedom Square) ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த ஏவுகணை தாக்குதலில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதாகவும் மற்றும் 20 பேர் காயமடைந்தனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் 10க்கும் மேற்பட்டவர்கள் இடிபாடுகளுக்கு அடியில் இருந்து மீட்கப்பட்டனர் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்த தகவலை மாநில அவசரகால சேவையிலிருந்து தெரிவித்ததாக யுக்ரேனிய செய்தி நிறுவனமான இன்டர்ஃபேக்ஸ் குறிப்பிட்டுள்ளது. மேலும் சுதந்திர சதுக்கத்தில் ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதல் தொடர்பான பதறவைக்கும் வீடியோவை உக்ரைன் வெளியிட்டுள்ளது.
Barbaric Russian missile strikes on the central Freedom Square and residential districts of Kharkiv. Putin is unable to break Ukraine down. He commits more war crimes out of fury, murders innocent civilians. The world can and must do more. INCREASE PRESSURE, ISOLATE RUSSIA FULLY! pic.twitter.com/tN4VHF1A9n
— Dmytro Kuleba (@DmytroKuleba) March 1, 2022
ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதலில் சுதந்திர சதுக்கம் சிதலமடைந்து காணப்படுகிறது.
newstm.in

