உலக நாடுகள் அதிர்ச்சி.. ஹைப்பா்சோனிக் ஏவுகணை மூலம் தாக்குதலை தொடங்கிய ரஷ்யா !!

உலக நாடுகள் அதிர்ச்சி.. ஹைப்பா்சோனிக் ஏவுகணை மூலம் தாக்குதலை தொடங்கிய ரஷ்யா !!

உலக நாடுகள் அதிர்ச்சி.. ஹைப்பா்சோனிக் ஏவுகணை மூலம் தாக்குதலை தொடங்கிய ரஷ்யா !!
X

உக்ரைன் மீது முதல் முறையாக அதிநவீன ஹைப்பா்சோனிக் ஏவுகணை ‘கின்ஜால்’ மூலம் தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. பல சிறிய நகரங்களை கைப்பற்றினாலும் தலைநகர் கீவ் மற்றும் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ்-வை கைப்பற்ற முடியவில்லை. உக்ரைன் தாக்குதலை எதிர்கொண்டு பதிலடியும் கொடுத்து வருகிறது.

russia hypersonicஇந்த நிலையில், அடுத்தக்கட்டமாக ஹைப்பா்சோனிக் ஏவுகணை மூலம் ரஷ்யா தாக்குதலை தொடங்கியுள்ளது. இதுகுறித்து ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடா்பாளா் இகோா் கொனாஷேன்கவ் கூறுகையில், ரஷ்யா வீசிய ஹைப்பா் சோனிக் ஏவுகணைகள் மேற்கு உக்ரைனின் உள்ள ஏவுகணை மற்றும் வெடிபொருள்கள் அடங்கிய நிலத்தடி கிடங்கை அழித்தது. கருங்கடல் பகுதியில் ஒடேசா துறைமுகத்தில் அமைந்துள்ள உக்ரைன் ராணுவ பகுதிகளை போா்க் கப்பலில் இருந்து ஏவுகணை மூலம் தாக்கி அழிக்கப்பட்டது, என்று தெரிவித்தாா்.

கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி முதல் உக்ரைன் மீது நடத்தப்படும் தாக்குதலில் பயன்படுத்தப்படும் பேரழிவு ஆயுதங்கள் குறித்த விவரங்களை ரஷ்யா வெளியிடுவதில்லை. தற்போது முதல் முறையாக ஹைப்பா்சோனிக் ஏவுகணை ‘கின்ஜால்’ பயன்படுத்தப்பட்டதாக ரஷ்ய அதிகாரபூா்வமாக அறிவித்துள்ளது.

russia hypersonic

ஒலியைவிட 10 மடங்கு வேகமாக செல்லக் கூடிய இந்த கின்ஜால் ஏவுகணை, இடைமறி ஏவுகணையையும் தாண்டிச் சென்று இலக்கைத் தாக்கி அழிக்கும் திறன் கொண்டதாகும்.

newstm.in

Tags:
Next Story
Share it