கடல் எல்லையில் ராணுவ டால்பின்களை பாதுகாப்பு பணியில் பயன்படுத்தும் ரஷ்யா !
கடல் எல்லையில் ராணுவ டால்பின்களை பாதுகாப்பு பணியில் பயன்படுத்தும் ரஷ்யா !

ரஷ்யா- உக்ரைன் இடையேயான போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. நாளுக்கு நாள் உக்ரைன் மீது கடுமையான தாக்குதல்களை அரங்கேற்றி வருகிறது ரஷ்யா. எனினும் அவ்வப்போது ரஷ்யா மீது குறிவைத்து உக்ரைன் தாக்குதல் நடத்துகிறது. இதனால் தனது எல்லையை ரஷ்யா தீவிரமாக பாதுகாத்து வருகிறது.
அண்மையில் ரஷ்யாவுக்கு சொந்தமான போர்க்கப்பலை உக்ரைன் தாக்கி அழித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நீருக்கடியில் இருந்து நடக்கும் தாக்குதலில் இருந்து தனது கடற்படையை பாதுகாக்க கருங்கடலில் உள்ள தனது கடற்படை தளத்தில் பயிற்சி பெற்ற டால்பின்களை ரஷ்யா நிறுத்தியுள்ளதாக அதிரவைக்கும் தகவல் வெளிவந்துள்ளது.
தி கார்டியன் என்ற பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், ராணுவ நோக்கங்களுக்காக டால்பின்களுக்கு நன்கு பயிற்சி அளித்து உள்ளது ரஷ்யா . அவை பொருட்களை மீட்டெடுக்க மற்றும் எதிரி டைவர்ஸைத் தடுக்கப் பயன்படுத்தப்படுகின்றன. செவஸ்டோபோல் கருங்கடலில் உள்ள ரஷ்ய கடற்படையின் மிக முக்கியமான கடற்படை தளமாகும், இது 2014 இல் ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட கிரிமியாவின் தெற்கு முனையில் அமைந்துள்ளது.
ரஷ்ய போர்க்கப்பல்களை தகர்க்க உக்ரேனிய சிறப்பு படைகள் நீருக்கடியில் துறைமுகத்திற்குள் ஊடுருவுவதை இது தடுக்கும்.
அமெரிக்காவும் இது போல், ராணுவ உதவிக்கு டால்பின்களுக்கு பயிற்சி அளிக்கிறது. அமெரிக்கா தனது சொந்த டால்பின்கள் மற்றும் கடல் சிங்கங்களை பராமரிக்க குறைந்தபட்சம் $28 மில்லியன் செலவிட்டு வருகிறது. தற்போது, நாட்டில் 70 டால்பின்கள் மற்றும் 30 கடல் சிங்கங்கள் சான் டியாகோவில் உள்ள கடற்படை தளத்தில் நீர்நிலைகளில் ரோந்து செல்கின்றன.
newstm.in